தேடல் தொடங்கியதே..

Thursday, 24 October 2013

கீழக்கரை முஹ்யித்தீனியா பள்ளிகளின் 23 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி - கீழக்கரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி முஹம்மது அனஸ் பங்கேற்பு !

கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் 23வது ஆண்டு ஆண்டு விழா இன்று (24.10.2013) மாலை 3.30 மணியளவில் முஹ்யித்தீனியா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ராஜன்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  டாக்டர். ஜோசப் ராஜன் அவர்களும், கீழக்கரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி முஹம்மது அனஸ்  (காவல் துறை சார்பு ஆய்வாளர், கோயம்பத்தூர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இதில் மாணவர்களை அரசுப் பணிகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் விதமாக, கீழக்கரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி முஹம்மது அனஸ் அவர்கள் பேசினார். மேலும் அவர் பேசும் போது "கீழக்கரையில் ஆணாக பிறந்தால் 'துபாய்' ; பெண்ணாக பிறந்தால் 'துபாய் மாப்பிள்ளை' என்கிற நிலை மாறி கல்விக் கூடங்கள் நிறைந்த நம் ஊரிலிருந்து IAS, IPS அதிகாரிகள் உருவாக முயற்சிக்க வேண்டும். நம் எண்ணங்கள் எப்படியோ, அது போலவே நம் எதிர்காலமும் அமையும். ஆகவே வெளிநாட்டு மோகத்தை விடுத்து, இப்போதே மாணவர்கள் நல்ல குறிக்கோள்களை மனதில் நிறுத்த வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்." இவ்வாறு பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் டாக்டர்.பாரூக் அவர்களின் நினைவு வளாகத்தை,  டாக்டர். ஜோசப் ராஜன் அவர்கள் திறந்து வைத்தார். பள்ளி மாணவ மானிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்குதெரு ஜமாத் செயலாளர் முஹைதீன் இபுறாஹீம் தம்பி வாப்பா, கல்விக்குழு செயலாளர்  டாக்டர். செய்யது ராசிக்தீன், கல்விக்குழு இணை செயலாளர் அஹமது மிர்ஷா, பொருளாளர் சேகு அஹமது பசீர், துணை செயலாளர் முஹம்மது ரபீக், பள்ளி முதல்வர் தேவி புவனேஸ்வரி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

3 comments:

 1. கீழக்கரை அலி பாட்சா24 October 2013 at 22:26

  அன்று


  மாணவ மணிகளே இது தான் சரியான தருணம், நீங்கள் எதுவாக ஆக வேண்டுமென்று இன்றே விதை போடுங்கள்…அதை நோக்கி செயல் படுங்கள்..

  {கீழை ராஸா என அன்பொழுக அழைக்கப்படும் முன்னாள் மாணவர் ராஜா கான் அவர்கள் மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளியில் 67 வது (2013)எழுச்சி மிகு சுதந்திர தின உரையின் ஒரு பகுதி}


  இன்று

  "கீழக்கரையில் ஆணாக பிறந்தால் 'துபாய்' ; பெண்ணாக பிறந்தால் 'துபாய் மாப்பிள்ளை' என்கிற நிலை மாறி கல்விக் கூடங்கள் நிறைந்த நம் ஊரிலிருந்து IAS, IPSஅதிகாரிகள் உருவாக முயற்சிக்க வேண்டும். நம் எண்ணங்கள் எப்படியோ, அது போலவே நம் எதிர்காலமும் அமையும். ஆகவே வெளிநாட்டு மோகத்தை விடுத்து, இப்போதே மாணவர்கள் நல்ல குறிக்கோள்களை மனதில் நிறுத்த வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்."

  மாணவர்களை அரசுப் பணிகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் விதமாக கீழக்கரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி முஹம்மது அனஸ் (காவல் துறை சார்பு ஆய்வாளர், கோயம்பத்தூர்) சிறப்பு விருந்தினராக பங்கேற்று கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் 23வது ஆண்டு ஆண்டு விழா (இன்று 24.10.2013 மாலை 3.30 மணியளவில்) முஹ்யித்தீனியா பள்ளி வளாகத்தில் சிறப்புரையாற்றினர்.

  கீழக்கரை வாசிகளில் படித்த மேதாவிகளியிடையே என்ன ஒரு உயர்ந்த கருத்துகள். இருவருமே ஊரார் அனைவரின் பராட்டுக்குரியவர்களே. வாழ்த்துவோம்.

  ReplyDelete
 2. அன்பு நண்பர் கீழை இளையவன் அவர்களுக்கு பெண்கள் பகுதி புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய பணிவான கருத்து.

  ReplyDelete
 3. அன்பு நண்பர் கீழை இளையவன் அவர்களுக்கு பெண்கள் பகுதி புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய பணிவான கருத்து.

  ReplyDelete