தேடல் தொடங்கியதே..

Saturday, 26 October 2013

கீழக்கரையில் ஊராட்சி தலைவர்களுக்கு இலவச கணினி பயிற்சி - அரசு செலவில் CSC கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடை பெறுகிறது !

தமிழக ஊராட்சிகளின் அனைத்து செயல்பாடுகளையும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அதனால் ஊராட்சி செயலாளர்களுக்கு பஞ்சாயத்துராஜ் மென்பொருளை இயக்கவும், அறிந்து கொள்ளவும் இணையதள வசதிகளை பயன்படுத்திட ஏதுவாக பயிற்சி வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் இணையதள வசதியுடன் கூடிய கணினி, பிரிண்டர் உட்பட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் வழங்கிடும் விண்ணப்பங்களையும், அவர்களுக்கு தேவையான குறிப்புகளை கணினி மூலம் பதிவு செய்தல், உரிய மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும், கணினி பதிவு செய்வதன் மூலம் அறிந்து கொள்ள ஏதாவது ஒரு ஊராட்சியில் கணக்குகள் குறித்து கேட்டறிந்தால் கணினியில் எளிதான  தெரிந்து கொள்ள முடியும். அனைத்து விதமான குறிப்புகளையும் குறிப்பு எடுத்துக் கொள்ள கணினிப்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. எனவே, கணினியைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதற்கான கணினி பயிற்சி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோருக்கு பேருக்கு கணினி பயிற்சி, கீழக்கரை CSC நிறுவனத்தில் நடை பெற்று வருகிறது.  இதில் ஓரு குழுவிற்கு ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் 17 நபர்கள் வீதம், மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவிற்கு ஐந்து நாட்கள் வீதம் மூன்று வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில், மைக்ரோசாப்ட் ஆபிஸ், மைக்ரோசாப்ட் எக்சல், ஓப்பன் ஆபிஸ், மின்னஞ்சல், கானொளி காட்சி, அரசு நிர்வாத்தில் தொழில்நுட்ப பயன்பாடு, விண்டோஸ்-7 அறிவு, வன்பொருள், மென்பொருள் உள்ளிட்ட 19 கணினி சம்பந்தமான தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவரும் புரியும் வண்ணம் தமிழ் மொழியில் பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment