தேடல் தொடங்கியதே..

Tuesday 22 October 2013

கீழக்கரை பழைய குத்பா பள்ளியை 'பழமை மாறாமல்' புதுப்பிக்கும் முதற்கட்ட புனரமைப்பு பணி துவங்கியது - ஜமாத்தார்கள் மகிழ்ச்சி !

கீழக்கரையில் அமைந்திருக்கும் மிக தொன்மையான, பல நூற்றண்டுகள் பழமை மிக்க புரதானப் பள்ளியாக திகழும் பழைய குத்பா பள்ளியை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டி, ஜமாத்தார்கள் பல்வேறு கட்ட கலந்தாய்வு ஆலோசனைகளை தொடர்ச்சியாக செய்து வந்தனர். இதில் பள்ளியை புனரமைப்பு செய்யவும், விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளவும், பழைய குத்பா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.  



இது குறித்து நாம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 



இந்நிலையில் தற்போது பழைய குத்பா பள்ளியின் ஒரு பகுதியில், சுண்ணாம்பு பூச்சுகள் அகற்றப்பட்டு, முதற்கட்ட புனரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது. இதனால் பல காலங்களாக, பள்ளியை புனரமைப்பு செய்து பொலிவாக்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்த ஜமாத்தார்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 




இது குறித்து பழைய குத்பா பள்ளி ஜமாத்தை  சேர்ந்த மூத்த சமூக ஆர்வலர். கீழக்கரை அலி பாட்சா அவர்கள் நம்மிடையே பேசும் போது "தற்போது முதல் கட்ட பணிகள் துவங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பள்ளி மிக உறுதியான பாறை கற்களால் கட்டப்பட்டுள்ளது. பல நூற்றாண்டு தொன்மை வாய்ந்த இந்த பள்ளியை பழமை மாறமல் புதுப்பிக்கும் பணி எனபது மிக நுட்பத்துடன் செய்யும் பணியாகும். இறைவன்  அருளால் இப்பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று, நிறைவடைந்திட அனைவரும் இறைவனிடம் கையேந்துவோம்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

படங்கள் : நண்பர்கள் பரக்கத் அலி & அபு சாலிஹ் 

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா22 October 2013 at 14:26

    மாஷா அல்லா. சர்வ புகழும் படைத்த யா ரப்பில் ஆல்மீனுக்கே.பல நூற்றாண்டு பழைமையான கீழக்கரை பழைய குத்பாப் பள்ளியை அதன் பழைமை குன்றாமல் பதினொன்றாம் நூற்றாண்டின் வடிவுக்கு புணர் அமைக்க தொடங்கி விட்டார்கள்.இம்மி அளவும் இடையூறு இல்லால், தொடங்கிய பணி எண்ணிய படி சிறப்பாக முடித்து கொடுக்க உன்னிடமே பொறுப்பு சாட்டி இரு கையேந்தி இறைஞ்சுகின்றோம்.சூரியக் கதிர்களை கண்ட பனித் துளிகள் உருகி மறைவது போல இடர்களை நீக்கி பணி சிறக்க,எடுத்த காரியத்தை விரைந்து முடிக்க கருணை புரிவாயாக. ஆமீன்

    ReplyDelete