தேடல் தொடங்கியதே..

Tuesday, 22 October 2013

கீழக்கரையில் பால்கனி சிலாப் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம்!

கீழக்கரை பேட்டை தெருவில் பாபு அப்துல்லா ஆட்டோ ஸ்டாண்ட் அருகே (பல் மருத்துவர் ரமீஸ் கிளினிக் மற்றும்  குழந்தைகள் நலமருத்துவர் ஜபருல்லா கிளினிக் செயல்படும் கட்டிட வாசலில்) அமைந்து உள்ள கட்டிடத்தின் சிலாப் இன்று (22.10.2013) இரவு சுமார் 7 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததில், அதன் அருகில் பேருந்திற்காக நின்றிருந்த  முனியம்மாள் (வயது 55) மற்றும் காந்தாரி (வயது 75) ஆகியோர் படு காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரையும் உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. படு காயமடைந்த இருவருக்கும் தற்போது இராமநாதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. 

No comments:

Post a Comment