தேடல் தொடங்கியதே..

Wednesday 16 October 2013

கீழக்கரையில் களை கட்டிய 'பெருநாள் இரவு' வியாபாரங்கள் !

கீழக்கரையில் வருடம் தோறும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளை, குடுமபத்தினருடன் கொண்டாடி மகிழ்வதற்காக, கடல் கடந்து வாழும் நம் சொந்தங்கள், கீழக்கரைக்கு விடுமுறையில் வருவது வழக்கம். அது போல் இந்த வருடமும் ஏராளமான கீழக்கரை நண்பர்கள் ஊருக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருங்கே சந்தித்து கொள்ளும் மகிழ்ச்சியான இரவாக, பெருநாளை எதிர் நோக்கி இருக்கும் இன்றைய இரவு அமைந்திருக்கிறது. 


இந்த இரவில் தான் பெரும்பாலான நண்பர்கள் பெருநாள் உடுப்புகளை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் முஸ்லீம் பஜார் பகுதியில் உள்ள ஆண்களுக்கான ஆடையகங்கள், வாடிக்கையாளர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அதன் தொடர்ச்சியாக தையல் கடைகளும் கடும் பிசியாய் இருக்கிறது. 



கீழக்கரையில் அதிகமானோர் ஹஜ்ஜுப் பெருநாள் கடமையான குர்பான் கொடுக்க இருப்பதால், இறைச்சிக் கடைகளில் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.காய்கறி கடைகளும் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 




முஸ்லீம் பஜார் பகுதியில் இரவு 7 மணியளவில் குழும ஆரம்பித்த, பல்வேறு தெருக்களை சேர்ந்த நண்பர்கள் பட்டாளம், ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லியவர்களாக, கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். 

No comments:

Post a Comment