தேடல் தொடங்கியதே..

Tuesday, 15 October 2013

கீழக்கரை ஹமீதியா திடலில் நடைபெற்ற மழை தொழுகை !

கீழக்கரை மேலத்தெருவில் உள்ள ஹமீதியா பெண்கள் விளையாட்டு மைதானத்தில்  இன்று (15.10.2013) காலை 9  மணியளவில், உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம் (UHMS) சார்பில், மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில், நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.தொழுகையின் முடிவில், இறையோனிடம் இரு கரம் ஏந்தியவர்களாய், கீழக்கரையில் நிலவி வரும் கடும் வறட்சியை போக்கி மழையை பொழிவிக்க, உருக்கமுடன் பிரார்த்தனை செய்யப்பட்டது.


No comments:

Post a Comment