தேடல் தொடங்கியதே..

Friday, 18 October 2013

கீழக்கரை புது கிழக்குதெரு முஹைதீன் மஸ்ஜித் 'மைய வாடி' சாவி ஒப்படைக்கும் நிகழ்ச்சி - பழைய குத்பா பள்ளி ஜமாத்தார்கள் பங்கேற்பு !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் செயல்படும், புதுக் கிழக்குத் தெரு முகைதீன் தொழுகைப் பள்ளியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் ஐவேளை தொழுகையும் நடந்து வருகிறது. இந்த பள்ளியின் அருகாமையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, கடந்த சில வருடங்களாக நல்லடக்கங்கள் நடை பெற்று வருகிறது. ஆனால் கப்ருஸ்தானை  சுற்றி, சரியான தடுப்பு சுவர் இல்லாததால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது முஹைதீன் பள்ளியின் கப்ருஸ்தானை  சுற்றி நான்கு புறமும் மதில் சுவர் கட்டப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்த மதில் சுவர், முன்னாள் ஜமாஅத் தலைவர் M.M.ஜின்னா சாகிபு அவர்களின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் கட்டிடமும், தற்போது கட்டப்பட்டுள்ள மைய வாடி மதில் சுவரும், மர்ஹூம். முகைதீன் அப்துல் காதர் (குருவிப் பிள்ளை சம்மாட்டி) அவர்களின் குடும்பத்தினரின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்த மையவாடியின் வாசல் சாவியினை, ஜமாத்தாரிடம் முறைப்படி ஒப்படைவு செய்யும் நிகழ்ச்சி இன்று (18.10.2013) மாலை சரியாக 5 மணியளவில் புதுக் கிழக்குதெரு முஹைதீன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. அச்சமயம் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவரும் கீழக்கரை நகராட்சி துணை தலைவருமாகிய H.ஹாஜா முஹைதீன் அவர்களிடம், மூர் டிராவல்ஸ் M.S.ஹசனுதீன் அவர்கள், மைய வாடி வாசலின் சாவியினை ஒப்படைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பழைய குத்பா பள்ளி ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா19 October 2013 at 14:05

    மாஷா அல்லா.(சில அல்ல) பல லட்ச பணச் செலவில் பழைய குத்பாப் பள்ளி ஜமாஅத்தை சார்ந்த, பகுதி மக்களால் குருவிபிள்ளை சம்மாட்டி என அன்பொழுக அழைக்கப்பட்ட மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மூத்த புதல்வ்ர் சம்சுதீன் அவர்களால் அவர் தம் மக்களின் மற்றும் சகோதரர் ஜின்னா அவர்களின் மனம் கனிந்த ஒத்துழைப்புடன் அப் பகுதி மக்களின் வசதி கருதி பின் பலன் கிஞ்சித்தும் எதிர்பாராது சொன்ன வாக்கை காப்பாற்றும் விதமாக சிறப்பாக கட்டி முடித்து வஃக்ப் செய்து கொடுத்தமைக்கு நாமும் அன்னவர்களுக்கு இரு கரம் ஏந்தி வல்ல ஏக நாயனிடம் துவா செய்வோமாக. ஆமீன்.

    மேலும் ஜனாஸா குளிப்பாட்டுவதற்கு தனி மேடையும், மின் விளக்கு வசதியும் செய்து கொடுப்பதாக இருக்கும் அவர்களின் எண்ணம் அறியப்படும் போது மட்டில்லா மகிழ்ச்சியை கொடுக்கிறது.

    THE LAST BUT NOT THE LEAST இன்ஷா அல்லா எதிர் வரும் காலத்தில் கூடிய விரைவில் அப் பகுதி பெரும்பான்மையோரின் நாட்டப்படி இப் பள்ளியில் ஜும்மா தொடக்க இவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட ப.கு.ப.ஜமாஅத் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழை இளையவன் வாய்லாக அன்பு வேண்டு கோள் வைக்கிறேன்.

    ReplyDelete